Ads 468x60px

** அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு **எள்ளேரி டுடே இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ** elleri2012@gmail.com **

Sunday 6 May 2012

சாதிவாரி கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் கலெக்டர் ராஜேந்திரரத்னூ வேண்டுகோள்

கடலூர், ஏப்.25-
கடலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் ராஜேந்திரரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கணக்கெடுக்கும் பணி
தமிழகம் முழுவதும் சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. கடலூர் மாவட்டத்திலும் இந்த பணி நடைபெற்று வருகிறது. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர் மற்றும் புள்ளி விவர பதிவாளர் ஆகிய 2 பேரும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூவின் வீட்டில் சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அப்போது கணக்கெடுப்பு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள 23 வகையான கேள்விகளை கணக்கெடுப்பாளர் வாசு கேட்க, அதற்கு கலெக்டர் ராஜேந்திரரத்னூ நிதானமாக பதில் அளித்தார். அவர் கொடுத்த விவரங்களை புள்ளி விவர பதிவாளர் கோபிநாத் தன்னிடம் உள்ள லேப்டாப் கம்ப்ïட்டரில் பதிவு செய்தார்.
கலந்து கொண்டவர்கள்
கலெக்டரின் அருகில் அவருடைய மகன் யாஷ்ரத்னூ இருந்தார். மேலும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி தமிழ்செல்வராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(ஊரகவளர்ச்சி பிரிவு) ராஜ்மோகன், கடலூர் நகரமைப்பு அதிகாரி சுப்புதாய், மேற்பார்வையாளர் நெப்போலியன், கட்டிட ஆய்வாளர் முருகன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் ராஜேந்திரரத்னூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒத்துழைப்பு தர வேண்டும்
கடலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 1,324 கணக்கெடுப்பாளர்கள், கம்ப்ïட்டர் அனுபவம் வாய்ந்த புள்ளி விவர பதிவாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் 1,459 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து விவரங்களை சேகரித்து வருவார்கள்.
இன்று(அதாவது நேற்று) காலையில் எனது வீட்டுக்கு கணக்கெடுப்பாளர்கள் வந்தனர். நான் அவர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் நிதானமாக பதில் அளித்தேன். அதேபோல பொதுமக்களும் கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைதியான முறையில் விவரங்களை தெரிவிக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பு எதிர்காலத்தில் அரசின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்கும் தேவையானதாக இருப்பதால் பொதுமக்கள் உண்மையான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
40 நாட்களுக்குள்…
6 கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு கணக்கெடுப்பாளருக்கும் 4 கணக்கெடுப்பு பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் 10 நாட்கள் வீதம் மொத்தம் 40 நாட்களுக்குள் கணக்கெடுப்பை முடிக்க வேண்டும் என்றும், நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 15 வீடுகளை கணக்கெடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பின் போது குடும்ப தலைவர், தொழில், ஜாதி, மதம், வீடு, வீடுகளில் உள்ள வசதிகள் உள்ளிட்ட 20 வகையான கேள்விகளை வீட்டின் உரிமையாளரிடம் கணக்கெடுப்பாளர் கேட்பார். அந்த கேள்விகளுக்கான பதிலை அருகில் அமர்ந்து இருக்கும் புள்ளி விவர பதிவாளர் தன்னிடம் உள்ள மினி லேப்டாப்பில் பதிவு செய்து கொள்வார். கணக்கெடுப்பு பணியை 40 நாட்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment